லாரி- 2 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

லாரி- 2 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து
Published on

தர்மபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஒரு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த 2 கார்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரி மீது மோதின. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கார்களில் வந்தவர்கள் பாதிப்பின்றி தப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com