தொப்பூர் கணவாயில்லாரி கவிழ்ந்து விபத்து; டிரைவர் காயம்

தொப்பூர் கணவாயில்லாரி கவிழ்ந்து விபத்து; டிரைவர் காயம்
Published on

நல்லம்பள்ளி:

கர்நாடக மாநிலம் பங்காருபேட்டையில் இருந்து மணப்பாறைக்கு அரிசி பாரம் ஏற்றி கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரியை செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கோபி (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் வந்தபேது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடி முன்னால் சென்ற மற்றொரு லாரியின் பின்பகுதியில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் அரிசி பார லாரி டிரைவர் கோபி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் ஒன்றிணைந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக தொப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்துக்குள்ளான லாரிகளை மீட்புக்குழுவினர் போலீசார் உதவியுடன் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com