வெண்ணந்தூர் அருகேஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவுஉறவினர் படுகாயம்

வெண்ணந்தூர் அருகேஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவுஉறவினர் படுகாயம்
Published on

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையம் முதலியார் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 61). இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாஸ்கர், அவருடைய உறவினரான தோப்புக்காடு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (60) ஆகியோர் ஸ்கூட்டரில் ஆட்டையாம்பட்டியில் நடந்த கோவில் பண்டிகைக்கு சென்றனர்.

பின்னர் அங்கு தரிசனத்தை முடித்து விட்டு ஸ்கூட்டரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது வெண்ணந்தூர் அருகே மின்னக்கல் பிரிவு சாலை பகுதியில் வந்தபோது ஸ்கூட்டர் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் பன்னீர்செல்வம் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். பாஸ்கர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com