ஊத்தங்கரை அருகேசரக்கு வேன்கள் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் பலி14 பேர் படுகாயம்

ஊத்தங்கரை அருகேசரக்கு வேன்கள் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் பலி14 பேர் படுகாயம்
Published on

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே சரக்கு வேன்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

நேருக்கு நேர் மோதல்

திருவண்ணாமலையில் இருந்து பூ லோடு ஏற்றி கொண்டு ஒரு சரக்கு வேன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நோக்கி வந்து கொண்டிருந்தது. கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து திருக்கோவிலூர் அய்யனார் கோவிலுக்கு சரக்கு வேனில் பக்தர்கள் சிலர் வந்து கொண்டிருந்தனர். அப்போது பாம்பாறு அணை அருகே வந்தபோது 2 சரக்கு வேன்கள் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 45) என்பவர் படுகாயம் அடைந்து பலியானார்.

விசாரணை

மேலும் சரக்கு வேனில்பயணம் செய்த 14 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com