காரிமங்கலம் அருகேமோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து லேப் டக்னீசியன் பலி

காரிமங்கலம் அருகேமோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து லேப் டக்னீசியன் பலி
Published on

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து லேப் டெக்னீசியன்பலியானார்.

லேப் டெக்னீசியன்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த புலிகரை வரகூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 28). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாட்லாம்பட்டி அருகே குப்பங்கரை பகுதியை சேர்ந்த பிரித்ரா என்பவருடன்திருமணம் நடந்தது.

இந்த நிலையில் பிரித்ரா தனது தாயார் வீட்டில் இருந்தார். இதையொட்டி நேற்று முன்தினம் வேலை முடிந்து இரவு சுபாஷ் சந்திரபோஸ் மனைவியை பார்த்துவிட்டு மாட்லாம்பட்டி செல்வதாக கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

விசாரணை

அப்போது சாலையில் இருந்த வேகத்தடையில் ஏறி இறங்கியபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் செல்போன் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சுபாஷ் சந்திரபோஸ் நேற்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com