பாப்பிரெட்டிப்பட்டி அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர்கள் படுகாயம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர்கள் படுகாயம்
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எலந்தகொட்டப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் ராஜேஷ் (வயது 19). இவருடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது மோட்டார் சைக்கிளில் அதே ஊரை சேர்ந்த நண்பர் சந்தோஷ் (20) என்பவரை உட்கார வைத்து கொண்டு பாப்பிரெட்டிப்பட்டிக்கு வந்தனர். அங்கு மாத்திரை, மருந்துகள் வாங்கி கொண்டு சாமியாபுரம் கூட்ரோடு நோக்கி வந்தனர்.

அப்போது அங்குள்ள தனியார் கிரானைட் அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ராஜேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜேஷ், சந்தோஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com