தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து; டிரைவர் படுகாயம்

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து; டிரைவர் படுகாயம்
Published on

நல்லம்பள்ளி:

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

தடுப்பு சுவரில் மோதியது

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு துவரம் பருப்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரியை ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் விஜய் (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியதில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது இடிபாடுகளில் சிக்கி டிரைவர் படுகாயம் அடைந்து சிக்கி தவித்தார்.

விசாரணை

விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் விபத்துக்குள்ளான லாரியை போலீசார் உதவியோடு மீட்பு குழுவினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com