நாகூர்-நாகை சாலையில் விபத்து ஏற்படும் அபாயம்

நாகூர்-நாகை சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகூர்-நாகை சாலையில் விபத்து ஏற்படும் அபாயம்
Published on

நாகூர்- நாகை சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகூர் தர்கா

நாகை மாவட்டம் நாகூரில் உலகப்பிரசித்திப்பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகிறார்கள். இதன் காரணமாக நாகூர் பகுதி எப்போதும் போக்குவரத்து நெருக்கடியுடன் காணப்படும்.

அதேநேரத்தில் நாகையில் இருந்து சென்னை, புதுச்சேரி, சிதம்பரம், மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம், காரைக்கால் உள்ளிட்ட ஊர்களுக்கு நாகூர் வழியாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து மிகுந்த சாலையாக நாகூர் மெயின் சாலை இருந்து வருகிறது. நாகூர் பழைய பஸ் நிலையம் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

வேகத்தடை

இந்த நிலையில் அந்த சாலையில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் கடந்து செல்வதால் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையை கடந்து செல்வதற்கு அதிக நேரமாகிறது. எனவே அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதால் நாகூர்-நாகை மெயின் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com