கோவில்பட்டியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது விபத்து: 2 பேர் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட போது வெடி விபத்து ஏற்பட்டு 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவில்பட்டியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது விபத்து: 2 பேர் உயிரிழப்பு
Published on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள காட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டு கட்டடம் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது.இதில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த புளியங்குளத்தைச் சேர்ந்த ஐயப்பன், விருதுநகர் மாவட்டம் புல்லகவுண்டன்பட்டியை சேர்ந்த மாலதி ஆகியோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். சூர்யபிரகாஷ் என்பவர் படுகாயம் அடைந்தார்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த உடல்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த சூரிய பிரகாஷ்சினை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி சார் ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர்.கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com