

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குஞ்சார் வலசை பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று மாலை கார் சென்றுகொண்டிருந்தது.
அப்போது திடீரென சாலையின் குறுக்கே பைக் வந்துள்ளது. இதில் பைக் மீது கார் மோதியது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் எதிர்திசையில் சென்ற சுற்றுலா வேன் மீது மோதியது.
வாகனங்கள் அடுத்தடுத்து மோதி நடந்த இந்த கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.