விழுப்புரம்: பைக் மீது அரசு பஸ் மோதி ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்: பைக் மீது அரசு பஸ் மோதி ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
Published on

விழுப்புரம்

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3 பேர் இன்று காலை விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே உள்ள நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர்.

இந்நிலையில், கோட்டகுப்பம் அருகே முதலியார்சாவடி கிழக்கு கடற்கரை சாலையில் சென்றுகொண்டிருந்தபோது வேகமாக வந்த அரசு பஸ் முன்னால் சென்றுகொண்டிருந்த பைக் மீது மோதியது. இந்த கோர விபத்தில் பைக்கில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், சாலையில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் 3 பேரின் உடலையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com