டி.என்.பாளையம் அருகே 2 கார்கள் மோதி விபத்து - 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

டி.என்.பாளையம் அருகே 2 கார்கள் மோதிய விபத்தில் 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
டி.என்.பாளையம் அருகே 2 கார்கள் மோதி விபத்து - 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
Published on

ஈரோடு,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து பாஸ்கர் என்பவர் தனது குடும்பத்தை சேர்ந்த 5 பேருடன் பெங்களூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார், காரை பாஸ்கர் ஓட்டி வந்தார்.

அதே போன்று கோவை அருகேயுள்ள வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரும் தனது உறவினர் ஒருவருடன் காரில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பாஸ்கர் சென்று கொண்டிருந்த கார் சத்தியமங்கலம்- அத்தாணி சாலையில் டி.என்.பாளையம் அருகேயுள்ள காளியூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற சரக்கு ஆட்டோ ஒன்றை முந்தியுள்ளார்.

அப்போது அதே நேரத்தில் பின்னால் வந்த ஜெயச்சந்திரனும் பாஸ்கர் காரை முந்த முயன்று உள்ளார், அப்போது எதிர்பாராதவிதமாக ஜெயச்சந்திரனின் கார் பயங்கர சத்தத்துடன் பாஸ்கரின் கார் மீது மோதியது.

இரண்டு கார்களும் மோதிய வேகத்தில் அருகில் இருந்த விவசாய நிலத்திற்குள் புகுந்தது, அதிர்ஷ்டவசமாக பாஸ்கர் காரில் இருந்த 5 பேரும், ஜெயச்சந்திரன் காரில் இருந்த 2 பேர் உள்ளிட்ட 7 பேரும் சிறிதும் காயமின்றி உயிர் தப்பினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரு கார்களும் ஒன்றன் மீது ஒன்று மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com