

செங்கல்பட்டு,
தொடர் விடுமுறையை கொண்டாட சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள், தற்போது விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் புலிப்பாக்கம் என்ற இடத்தில் சாலையில் சென்ற ஒரு கார் திடீரென பிரேக் பிடித்து நின்றதால், பின்னால் வந்த கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் 7 கார்கள் சேதமடைந்தன. கார்களில் இருந்தவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்த வாகன ஓட்டிகளை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.