நெல்லை அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: 20 பயணிகள் காயம்

வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ஆம்னி பஸ் விபத்தில் சிக்கியுள்ளது.
நெல்லை அருகே லாரி மீது ஆம்னி பஸ்  மோதி விபத்து: 20 பயணிகள் காயம்
Published on

நெல்லை,

வேளாங்கண்ணியில் இருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரத்திற்கு சென்ற தனியார் ஆம்னி பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது. இன்று அதிகாலை நெல்லை அருகே உள்ள பொன்னாக்குடி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து, லாரி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக காயமடைந்த பயணிகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

டிரைவரின் தூக்கக் கலக்கத்தால் விபத்து ஏற்பட்டதா? அல்லது அதிவேகத்தில் சென்றதால் விபத்து ஏற்பட்டதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக நெல்லை - திருவனந்தபுரம் செல்லும் நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com