தூய்மைப் பணியாளர்கள் இளைப்பாற இடவசதி - மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

தூய்மைப் பணியாளர்கள் இளைப்பாற இடவசதி ஏற்படுத்தி கொடுக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
தூய்மைப் பணியாளர்கள் இளைப்பாற இடவசதி - மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
Published on

சென்னை,

பணியின் நடுவே தூய்மைப் பணியாளர்கள் இளைப்பாறவும், மதிய வேளைகளில் அமர்ந்து உணவருந்தவும் போதுமான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு, மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது;-

"அலுவலகங்களில் நாம் அமர்ந்து பணியாற்றும் அறைகளையும், உபயோகப்படுத்தும் ஓய்வறைகளையும் நாள்தோறும் தூய்மைப்படுத்தித் துலங்கச் செய்யும் தூய்மைப் பணியாளர்கள் அமர இடமின்றி அல்லாடுவதைப் பற்றி பலரும் என் கவனத்திற்கு கொண்டு வருகின்றனர்.

நீங்கள் இதில் நேரடியாக தலையிட்டு பணிக்கு நடுவே அவர்கள் அவ்வப்போது அமர்ந்து இளைப்பாறவும், மதிய வேளைகளில் உட்கார்ந்து உணவருந்தவும், நீர் பருகவும் போதிய வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

புதிதாக கட்டப்படுகிற இடங்களிலும், அலுவலகங்களிலும் இத்தகைய வசதிகளை உள்ளடக்கித் திட்டவரைபடத்தில் போதிய இடம் ஒதுக்குவது மிகவும் அவசியம்.

செய்து கொடுத்த வசதிகளை ஆவணப்படுத்தி என் பார்வைக்கு அனுப்புங்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் மட்டுமல்ல, மற்ற அலுவலகங்களிலும் இந்நெறிமுறையை பின்பற்ற வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com