மத்திய அரசு அறிவித்த திட்டத்தின்படி மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவித்த திட்டத்தின்படி மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
Published on

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2023-24-ம் நிதியாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 3093 மாணவ- மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இந்த மாணவ, மாணவிகள் https://yet.nta.ac.in. என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 அல்லது 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரமும், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தேசியதேர்வு முகமை நடத்தும் நுழைவு தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வுக்கு வருகிற 10-ந் தேதிக்குள் மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்து தேர்வு ஓ.எம்.ஆர். முறையில் செப்டம்பர் மாதம் 29-ந் தேதி நடத்தப்படும். விண்ணப்பத்துடன் செல்போன் எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், வருமான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் மேற்கண்ட இணையதள முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com