நெல்லையில் கொலை மிரட்டல் வழக்கு குற்றவாளி கைது

நெல்லையில் வழிப்பறி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
கைது
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு வழிப்பறி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியை சேர்ந்த தங்கபாண்டி (வயது 28) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

மேற்சொன்ன வாலிபர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 3½ மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், மேற்சொன்ன குற்றவாளிக்கு திருநெல்வேலி மூன்றாவது குற்றவியல் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து மேற்சொன்ன குற்றவாளியை தாழையூத்து காவல் நிலைய போலீசார் தேடிவந்த நிலையில், இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com