தூத்துக்குடியில் பெண் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது: தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு


தூத்துக்குடியில் பெண் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது: தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
x

நாலாட்டின்புதூர் பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த பெண் கொலை வழக்கில் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து 2 ஆண்டுகள் தீர்வின்றி இருந்து வந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த பெண் கொலை வழக்கில் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து 2 ஆண்டுகள் தீர்வின்றி இருந்து வந்த நிலையில மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 எதிரிகளை கடந்த 7.6.2025 அன்று கைது செய்தனர். மேற்சொன்ன கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் நேற்று (9.6.2025) சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

1 More update

Next Story