கைப்பந்து போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை

கைப்பந்து போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
கைப்பந்து போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை
Published on

தட்டார்மடம்:

தூத்துக்குடி வருவாய் மாவட்ட பள்ளிக்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் பல பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சாத்தன்குளம் டி.என்.டி.டி.ஏ. ஆர்.பி.புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியின் 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் கைப்பந்து போட்டியில் மாவட்ட அளவில் 2-ம் இடமும், 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் ஹேண்ட் பால் போட்டியில் 2-வது இடமும், சிலம்பம் போட்டியில் 14 வயதுக்குள்பட்ட மாணவர் பிரிவு 30 கிலோ எடை பிரிவில் 3-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமைச் சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் வசந்த், ஜெபத்துரை, ராஜேஷ், ஜெபசீலன், ஆக்னஸ் ஆகியோரை பள்ளி தாளாளர் கிருபாகரன், தலைமை ஆசிரியர் ஜெபசிங் மனுவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com