தேசிய அளவிலான கராத்தே போட்டியில்ஓசூர் மாணவ, மாணவிகள் சாதனை

தேசிய அளவிலான கராத்தே போட்டியில்ஓசூர் மாணவ, மாணவிகள் சாதனை
Published on: 

ஓசூர்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இதில் ஓசூரை சேர்ந்த 45 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, கட்டா பிரிவில் 23 தங்கம், 11 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்களை பெற்றனர். குமித்தோ பிரிவில் 1 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்கள் வென்றனர். இந்த மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று சாதனை படைத்தனர்.

இதனை தொடர்ந்து, சாதனை மாணவர்களுக்கு ஓசூர் டென்னிஸ் கிளப்பில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் செயலாளர் திருப்பதிசாமி தலைமையில் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், பொருளாளர் பசவலிங்கராஜ், கராத்தே மாஸ்டர் ரவி, பாப்பண்ணா மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com