12 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட பிரதமர் மோடி அரசின் சாதனைகள் - எல்.முருகன்

15.7 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
எல்.முருகன்
Published on

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

அரசின் சாதனைகள்..!

ஏழைகளின் நலனுக்காக 12 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனைகள்..!

  • 25 கோடி மக்கள் பன்முக வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.

  • 58.15 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

  • 44 கோடி ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

  • 15.7 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

  • 12 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

  • 10 கோடிக்கும் மேற்பட்ட உஜ்வாலா LPG இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

  • 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

  • 2.9 கோடி குடும்பங்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது.

  • ஜன்தன் கணக்குகளில் ₹3 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட சேமிப்புத் தொகை உள்ளது.

  • அடல் பென்ஷன் யோஜனாவில் 9 கோடிக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.

  • பிரதம மந்திரி பாதுகாப்பு பீமா யோஜனாவில் 58 கோடிக்கும் மேற்பட்டோர் விபத்து காப்பீட்டின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

12 ஆண்டுகள் — நம்பிக்கை, வளர்ச்சி, மக்கள் நலன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com