அழிஞ்சி கண்மாயில் மீன்பிடி திருவிழா

அழிஞ்சி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
அழிஞ்சி கண்மாயில் மீன்பிடி திருவிழா
Published on

பொன்னமராவதி அருகே ஏனாதி ஊராட்சியில் அழிஞ்சி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பொதுமக்கள் கண்மாயில் திரண்டனர். ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டை வீசி மீன்பிடி திருவிழாவை தாடங்கி வைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த ஊத்தா, கச்சா, தூரி, வலை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கண்மாயில் இறங்கி மீன் பிடித்தனர். இதில் கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி உள்ளிட்ட பலவகை மீன்களை பிடித்து சென்றனர்.

இதேபோல் நேற்று ஏனாதி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com