தமிழகம், கேரளா உட்பட நாடு முழுவதும் ஜாய் ஆலுக்காஸ் நகைகடைகளில் வருமான வரிசோதனை

தமிழகம், கேரளா உட்பட நாடு முழுவதும் ஜாய் ஆலுக்காஸ் நகைகடைகளில் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது.#ITRaid
தமிழகம், கேரளா உட்பட நாடு முழுவதும் ஜாய் ஆலுக்காஸ் நகைகடைகளில் வருமான வரிசோதனை
Published on

மதுரை,

ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடையினர் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான

வரித்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் இன்று சென்னையில் உள்ள அந்த கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக்

கடையிலும் இன்று வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. அதிகாரிகள் 4 பேர் நகைக்கடைக்கு சென்று சோதனையில் ஈடு பட்டு வருகின்றனர்.

சோதனை தொடங்கியதும் நகைகடையை உள்புறமாக பூட்டப்பட்டது. கடை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு மதுரை கோமதிபுரத்தில் உள்ள தனியார் உர நிறுவனத்திலும் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இது போல் புதுச்சேரியில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைகடையிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகம், கேரளா உட்பட நாடு முழுவதும் உள்ள கிளை நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

#ITRaid | #IncomeTaxRaid | #Joyalukkas

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com