

வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளது.
இதையொட்டி இன்று மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்பாது மருத்துவமனை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) சந்தோஷ்குமார், டாக்டர் அனிதா மற்றும் பலர் உடனிருந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகயில், 'வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் 4 படுக்ககள் காண்ட போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டை ஒழிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பொது இடங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள் ஆகிய இடங்களில் புகையிலை, மது மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.