தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 58 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காந்தி ஜெயந்தி தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 58 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 58 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
Published on

திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வசந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை, தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும். திருச்சிராப்பள்ளி, கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபால் மற்றும் இணை ஆணையர் திவ்யநாதன், வழிகாட்டுதலின்படி, திருவாருர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வசந்தகுமார் தலைமையிலான துறை அலுவலர்கள் அடங்கிய குழு காந்தி ஜெயந்தி தினமான தேசிய பண்டிகை விடுமுறை தினத்தன்று திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இயங்கும் கடைகள், வணிக, உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குரவத்து நிறுவனங்கள் என மொத்தம் 102 நிறுவனங்களை திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் 28 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் 30 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 58 நிறுவனங்கள் முறையாக அறிவிப்பு சார்வு செய்து பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ, முறையாக அளிக்க வழிவகை செய்யாது, பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த 58 நிறுவனங்கள் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com