தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரத்திலிருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி

தியாகிகளின் ஓய்வூதியம் 17 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரத்திலிருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி
Published on

சென்னை,

நாட்டின் 74-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

*4-வது முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்ததில் பெருமை அடைகிறேன்.

*சுதந்திர போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் 16 ஆயிரத்தில் இருந்து 17 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

*சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் 8 ஆயிரத்தில் இருந்து 8,500 ஆக உயர்த்தப்படும்

*வந்தே பாரத் மற்றும் சமுத்திர சேது திட்டத்தின் மூலம் 64, 661- வெளிநாட்டு தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

*தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் குறைவாகவே உள்ளது.

*கொரோனாவை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது

*கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிசச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

*மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது, விரைவில் திறக்கப்படும்.

*அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீடு வழங்க சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com