

சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தனது 52-வது பிறந்த நாளை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடுகிறார். அதையொட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்த நாள் விழாவில், முதல்-அமைச்சரின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் நிருபர்கள், "முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வாய் திறந்து பேச வேண்டும் என்று தி.மு.க.வினர் கூறிவருகின்றார்களே" என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த அவர், "கடந்த 60 ஆண்டுகளாக பேசி பேசியே நாட்டை கெடுத்துவிட்டார்கள். பேசுவதைவிட செயல்படுவதே முக்கியம்" என்று கூறினார்.