சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்: கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே அவற்கை தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்
Published on

சென்னை,

சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் - கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். இதுகுறித்து, இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளதாவது:-

நம்பிக்கை சீர்குலைக்கிறது

சென்னை அடையாறு வண்ணாந்துறையில் ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார். இது மனதை பதை பதைக்க செய்கிறது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆயுதங்களுடன் கும்பல்கள் சுதந்திரமாக செயல்படுவது காவல்துறையின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கிறது.

நடவடிக்கை மட்டும் போதாது

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. காவல் துறை, குற்றம் நடந்த பின்னர் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது மட்டும் போதாது. குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே அவற்கை தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

போதை மற்றும் மதுகலாச்சாரம்

தமிழக அரசு சட்டம் - ஒழுங்கு பிரச்சினை குறித்து வெறும் விளக்கங்களை மட்டுமே அளித்து வருவதை விட்டுவிட்டு, மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். குற்ற செயலயல்கள் அதிகரிப்பதற்கான அடிப்படை காரணங்களை கண்டறிந்து போக்க வேண்டும். போதை மற்றும் மதுகலாச்சாரத்திற்கு தீர்வு காணவேண்டும்.

போதை மற்றும் மது கலாச்சாரத்திற்கு எதிராக விழிப்புணர்வு பரப்புரை இயக்கத்தை மாநிலம் தழுவிய முறையில் தமிழ்நாடு அரசே நடத்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com