

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆயலவாடி கிராமத்தில் ஏரிக்கரை உள்ளது. இந்த ஏரிக்கரையில் வேல மரங்கள், புங்கன், வேப்பமரங்கள் இருந்தன. சம்பவத்தன்று வேலமரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடமும், வனச்சரக அலுவலர்களிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரத்தை வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.