பள்ளிக்கூட குடிநீர் தொட்டியில் சாணம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை

பள்ளிக்கூட குடிநீர் தொட்டியில் சாணம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிக்கூட குடிநீர் தொட்டியில் சாணம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை
Published on

விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் செயலாளர் காளிதாஸ், மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் அருகே சின்ன முப்பன்பட்டி கிராமத்தில் உள்ள யூனியன் நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் சாணம் கலக்கப்பட்டதாக வெளியான தகவல் மனத்தை பதற வைக்கிறது. எனவே இதுகுறித்து முறையாக விசாரணை செய்து குடிநீர் தொட்டியில் சாணம் கலந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசிடம் உரிய நிதி ஒதுக்கீடு பெற்று அனைத்து அரசு பள்ளிகளிலும் சுற்றுச்சுவர், கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் குடிநீர் தொட்டியை பாதுகாப்பான இடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இ்வ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com