தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோடிக்குஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
Published on

சென்னை,

நாகையை சேர்ந்த 23 தமிழக மீனவர்கள் கடந்த 11-ந்தேதி 2 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்களை கடந்த 13-ந்தேதி இலங்கை கடற்படையினர் பருத்தித்துறை கடல் பகுதியில் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களது இரு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர் கள் இலங்கை காரைநகரில் உள்ள கடற்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டு உள்ளனர்.

இலங்கை கடற்படையின் இந்த செயல் வண்மையாக கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையினரால் அடிக்கடி மேற்கொள்ளப்படும் கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவோமோ என்ற அச்சத்திலேயே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழக மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

எனவே நீங்கள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, 23 மீனவர்களின் விடுதலையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி என்றாலே பட்டாசும், அது அதிகளவில் தயாரிக்கப்படும் இடமான சிவகாசியும்தான் நம் நினைவுக்கு முதலில் வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவதுடன் தமிழ்நாட்டின் பொருளாதாரமும் மேம்படுகிறது.

இந்த சூழ்நிலையில், இந்த ஆண்டு டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பட்டாசு தொழிலில் ஈடுபட்டு இருப்போர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தடையை நீக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com