பல்கலைக்கழகத்தை தரவரிசை பட்டியலில் முன்னேற்ற நடவடிக்கை; புதிய துணைவேந்தர் சந்திரசேகர் பேட்டி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை அகில இந்திய அளவில் தரவரிசை பட்டியலில் 50-வது இடத்திற்குள் முன்னேற்றுவதே கனவு திட்டம் என்று புதிய துணைவேந்தர் சந்திரசேகர் கூறினார்.
பல்கலைக்கழகத்தை தரவரிசை பட்டியலில் முன்னேற்ற நடவடிக்கை; புதிய துணைவேந்தர் சந்திரசேகர் பேட்டி
Published on

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை அகில இந்திய அளவில் தரவரிசை பட்டியலில் 50-வது இடத்திற்குள் முன்னேற்றுவதே கனவு திட்டம் என்று புதிய துணைவேந்தர் சந்திரசேகர் கூறினார்.

பதவி ஏற்பு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பிச்சுமணி பதவிகாலம் முடிவடைந்தது. இதை தொடர்ந்து இதே பல்கலைக்கழகத்தில் முன்பு புவி தொழில்நுட்ப ஆய்வு துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்ற சந்திரசேகர் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

அவர் நேற்று பல்கலைக்கழகத்துக்கு வந்து புதிய துணை வேந்தராக பொறுப்பேற்றார். அவருக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பின்னர் துணைவேந்தர் சந்திரசேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவி ஏற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு 14 ஆண்டுகள் பேராசிரியராக, துறைத்தலைவராக பணியாற்றி உள்ளேன். மீண்டும் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு பாடுபட வாய்ப்பு வழங்கியதற்கு அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தரவரிசை பட்டியல்

இந்த பல்கலைக்கழகத்தை உலகம் போற்றும் அளவுக்கு பல மடங்கு வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல முடியும். தற்போது ஏ-கிரேடில் உள்ள பல்கலைக்கழகத்தை ஏ ++ கிரடுக்கு உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதுதவிர அகில இந்திய அளவில் கடந்த 2019-ம் ஆண்டு தரவரிசை பட்டியலில் 89 இடத்தில் இருந்தது. தற்போது 80-வது இடத்துக்கு வந்துள்ளது. இதை விரைவில் 50-வது இடத்துக்குள் முன்னேற்றுவதே எனது கனவு திட்டம் ஆகும். இதற்கு மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு, தேவையான ஆசிரியர்கள், ஆராய்ச்சிகள், ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியீடு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தப்படும்.

புதிய பாடத்திட்டம்

தற்போது உள்ள பாடத்திட்டம் நன்றாக உள்ளது. இருந்த போதிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகளவு கிடைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பம், இன்றைய அறிவியல் வளர்ச்சி ஆகியவை குறித்து ஆய்வு செய்து புதிய பாட திட்டங்கள் வடிவமைக்கப்படும். நிதி ஆதாரத்தை பெருக்கவும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பதிவாளர் (பொறுப்பு) அண்ணாதுரை உடனிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com