

சென்னை,
தமிழக சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்து சென்னையில் அறநிலையத்துறை அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வைப்பு நிதியில் வைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தனியார் வசம் உள்ள 177 ஏக்கர் நிலத்தை மீட்க, வருவாய்த்துறை மூலம் சட்டப்போராட்டம் நடத்தப்பட்டு நிலங்கள் மீட்கப்படும் என்று அவர் கூறினார்.