நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளில் ஈடுபடும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளில் ஈடுபடும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளில் ஈடுபடும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
Published on

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் எந்த வித முறைகேடுகளுக்கும் இடம் அளிக்காமல் நெல் கொள்முதல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக அரியலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் இணைந்து நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தை நேற்று நடத்தினர். அரியலூரில் உள்ள மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வணிகப் கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையின் மயிலாடுதுறை சரக போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகதீசன், அரியலூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர் சிற்றரசு ஆகியேர் கூட்டாக தலைமை தாங்கினார். அப்போது அவர்கள் நெல் கொள்முதல் நிலையங்களில் எவ்வித முறைகேடுயின்றி விவசாயிகள் கொண்டு வரும் நெல்லினை தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உடனுக்குடன் கொள்முதல் செய்ய அறிவுறுத்தியும், முறைகேடுகளில் ஈடுபடும் அலுவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com