சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
Published on

சென்னை,

சென்னையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள். பதிவாளரை பணியிடை நீக்கம் செய்யக்கோரி உயர்கல்வித்துறை செயலாளர் 2 முறை கடிதம் அனுப்பியும், இதுவரை பணியிடை நீக்கம் செய்யவில்லை. மேலும் அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர், விடுப்பு எடுத்துக்கொள்வதற்கும் அதிகாரம் இல்லை. எனவே சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை பணிநீக்கம் செய்யாத துணைவேந்தர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கி இருக்கிறது. அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை பதிவாளர் செய்து வருகிறார். வருமான வரித்துறைக்கு தேவையான ஆவணங்கள் அனைத்தும் அளிக்கப்பட்டு இருக்கின்றன. அரசும், பல்கலைக்கழகத்துக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com