விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டவர் கைது

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டவர் கைது.
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டவர் கைது
Published on

பூந்தமல்லி,

கேரள மாநிலம் விழிஞ்ஞம் கடற்பகுதியில் கடந்த மார்ச் மாதம் தோணி மூலம் கடத்தி வரப்பட்ட 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே-47 ரக துப்பாக்கிகள் மற்றும் 1000 தோட்டாக்களை கடலோர பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அவற்றை கடத்தி வந்த இலங்கையை சேர்ந்த 6 பேரும் கைதானார்கள். இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டு, ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 2-ந்தேதி இந்த வழக்கில் சுரேஷ் மற்றும் சவுந்தரராஜன் ஆகிய 2 பேரை தேசிய புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் இந்த வழக்கு தொடர்பாக சென்னை, திருவள்ளூர் மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டங்களில் 7 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். வளசரவாக்கம், முரளி கிருஷ்ணா நகரில் தங்கி இருந்த சத்குணம் என்ற சபேசன் (வயது 46) என்ற இலங்கை தமிழர் வீட்டில் நடத்திய சோதனையில் விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் செல்போன், சிம் கார்டுகள், டேப்லட் உள்ளிட்ட 7 டிஜிட்டல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதை பொருள் கடத்த உடந்தையாக செயல்பட்டதும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மறுமலர்ச்சிக்காக பணியாற்றி வருவதும் தெரிந்தது. இதையடுத்து சபேசனை நேற்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com