நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வருவதாக நினைத்து தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் -அமைச்சர் பேச்சு

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வருவதாக நினைத்து தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வருவதாக நினைத்து தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் -அமைச்சர் பேச்சு
Published on

வேலூர்,

வேலூர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

கட்சியில் ஏமாற்றம், அவமரியாதை, வெறுப்பு இருக்கும். அவமானத்தையும், வெறுப்பையும், ஏமாற்றத்தையும் நினைத்திருந்தால் சவுகரியமாக நான் எம்.ஜி.ஆரிடத்தில் இருந்திருப்பேன். ஆனால் எனக்கு கட்சி மட்டும் தான் மலையாக தெரிந்தது. கட்சியில் பல்வேறு பொதுக்கூட்டங்களில் பேசி, பேசி வளர்ந்தவன் நான். கட்சியின் நான்காவது பொதுச்செயலாளராக நான் இருக்கிறேன். இது ஒன்றே போதும் என் பரம்பரைக்கு. இவ்வளவும் கட்சியால் வந்தது. நம்மை விட கட்சி பெரியது.

நாடாளுமன்ற தேர்தலுடன்...

மோடி என்ன செய்கிறார் என அவருக்கே தெரியவில்லை. நாடாளுமன்ற தேர்தல் உடனே வருகிறதா? அல்லது தள்ளி வைக்கிறாரா? என தெரியவில்லை. தேர்தல் விரைவில் வர இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வருகிறதா? என தெரியவில்லை. இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும் என நினைத்து நாம் களப்பணியாற்ற வேண்டும். தேர்தல் வருகிறதோ இல்லையோ நாம் அதற்கு ஆயத்தமாக வேண்டும்.

இவர் அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com