நடிகர் அஜித்தின் தாயார் மறைவு: அன்புமணி இரங்கல்

அஜித்குமாரின் தாயார் மோகினி மணி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என்று அன்புமணி கூறினார்.
நடிகர் அஜித்தின் தாயார் மறைவு: அன்புமணி இரங்கல்
Published on

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி, அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தாய் மீது நடிகர் அஜித்குமார் கொண்டிருந்த அன்பை நான் அறிவேன். உலகில் எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு என்பது தாயாரின் மறைவு தான்.

அன்னையை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com