நடிகர் கவுதம் கார்த்திக் சாமி தரிசனம்

பழனி முருகன் கோவிலில் நடிகர் கவுதம் கார்த்திக், அவரது மனைவியுமான நடிகை மஞ்சிமா மோகன் சாமி தரிசனம் செய்தனர்.
நடிகர் கவுதம் கார்த்திக் சாமி தரிசனம்
Published on

நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக், அவரது மனைவியும், நடிகையுமான மஞ்சிமா மோகன் ஆகியோர் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றனர். அங்கு ஆனந்த விநாயகர் மற்றும் முருகனை தரிசனம் செய்தனர். இவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

அதனை பெற்றுக் கொண்டு மீண்டும் அவர்கள் ரோப்கார் மூலம் அடிவாரத்துக்கு வந்தனர். நடிகர் கவுதம் கார்த்திக்கை பார்த்த பக்தர்கள், அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நிறைவடைந்த பிறகு அடுத்தடுத்து பிரபலங்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் நடிகை சமந்தா சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com