

சென்னை,
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் அலுவலகம் முன்பு திருவண்ணாமலையை சேர்ந்த அன்னியப்பன் (வயது 35) என்பவர் திடீர் ரகளையில் ஈடுபட்டார். அவர் தன்னை சினிமா துணை இயக்குனர் என்று கூறிக்கொண்டார். சினிமா இயக்குனராக ஆசைப்படுவதாகவும், அதற்காக கமல்ஹாசனை பார்க்கவேண்டும் என்றும் அவர் கூறினார். கமல்ஹாசனை பார்ப்பதற்கு அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இதனால் திடீர் ரகளையில் ஈடுபட்ட அவரை தேனாம்பேட்டை போலீசார் பிடித்துச்சென்றனர். பின்னர் அவரை போலீசார் எச்சரித்து, அவருடைய நண்பர் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.