போதைப்பொருள் வழக்கு - நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கேட்டு மனு


Actor Krishna plead for bail
x
தினத்தந்தி 27 Jun 2025 9:01 AM IST (Updated: 27 Jun 2025 11:47 AM IST)
t-max-icont-min-icon

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணா நேற்று கைது செய்யப்பட்டார்.

சென்னை,

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்யப்படுகிறது.

போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த், ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே, போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் நேற்று காலை கைது செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணாவை ஜூலை 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்யப்படுகிறது.


1 More update

Next Story