நடிகர் ராஜேஷ் மறைவு- கமல்ஹாசன் இரங்கல்


நடிகர் ராஜேஷ் மறைவு- கமல்ஹாசன் இரங்கல்
x
தினத்தந்தி 29 May 2025 9:22 PM IST (Updated: 29 May 2025 9:27 PM IST)
t-max-icont-min-icon

ராஜேஷின் குடும்பத்தாருக்கு ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்வதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் ராஜேஷின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ராஜேஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:

தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ். தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 More update

Next Story