நடிகர் ராஜேஷ் நல்ல மனிதர்; திடீர் மறைவு வருத்தமளிக்கிறது: ரஜினிகாந்த் உருக்கம்


நடிகர் ராஜேஷ் நல்ல மனிதர்; திடீர் மறைவு வருத்தமளிக்கிறது: ரஜினிகாந்த் உருக்கம்
x

சென்னை ராமாபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் ராஜேஷ் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் ராஜேஷ். சமீபகாலமாக உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை அருகேயுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 75.

மரணம் அடைந்த நடிகர் ராஜேசின் உடல், ராமாபுரம் கோத்தாரிநகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அன்றைய தினமே, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜேஷ் உடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் கூறியதாவது:- நடிகர் ராஜேஷ் நல்ல மனிதர்; திடீர் மறைவு வருத்தமளிக்கிறது. ராஜேஷ் என்னுடைய நெருங்கிய நண்பர். சினிமா, அரசியல் ஆன்மிகம் என அனைத்தும் தெரிந்தவர். ராஜேஷ் தன் வாழ்நாள் முழுவதும் நிறைய விஷயங்களை தேடி தேடி கற்றுக்கொண்டார். என்னை அடிக்கடி சந்தித்து ஆரோக்கியமாக இருக்க யோசனைகளை கூறுவார். ராஜேஷ் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பு" என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story