பாடகி ஜானகி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

பாடகி ஜானகி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பிரபல பின்னணி பாடகியான எஸ். ஜானகி, கர்நாடக மாநிலம் மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88. மூச்சுதிணறல் ஏற்பட்டு மைசூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. எஸ்.ஜானகி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் எஸ். ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com