விருது அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி: நடிகர் ரஜினிகாந்த் டுவிட்

விருது அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
விருது அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி: நடிகர் ரஜினிகாந்த் டுவிட்
Published on

சென்னை,

வரும் நவம்பர் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி கோவாவில் 50-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த திரைப்பட விழாவில்,  நடிகர் ரஜினிகாந்த்திற்கு சிறப்பு நட்சத்திர விருது ( Icon of Golden Jubliee) வழங்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.  

இந்த நிலையில், விருது  வழங்குவதாக அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com