நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் - ரஜினி மக்கள் மன்றம் சார்பாக சங்கர மடத்தில் கோ பூஜை

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சங்கர மடத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கோ பூஜை நடைபெற்றது.
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் - ரஜினி மக்கள் மன்றம் சார்பாக சங்கர மடத்தில் கோ பூஜை
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் தனது 71-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அரசியலுக்கு வருவது குறித்து சில தினங்களுக்கு முன் அவர் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், இந்த ஆண்டு ரஜினிகாந்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் பலர், நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடினர். திரைப்பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்திற்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள சங்கரமடத்தில், ரஜினி மக்கள் மன்ற தென் சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக இன்று அதிகாலை கோ பூஜை நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com