அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் போதை முழுமையாக ஒழிக்கப்படும் நடிகர் ரோபோ சங்கர் நம்பிக்கை

அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் போதை முழுமையாக ஒழிக்கப்படும் என நடிகர் ரோபோ சங்கர் தொவித்துள்ளா.
அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் போதை முழுமையாக ஒழிக்கப்படும் நடிகர் ரோபோ சங்கர் நம்பிக்கை
Published on

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இத்திட்டத்தை வெற்றிகரமாக இயக்கிய திட்ட இயக்குனரான இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. விழுப்புரத்தில் உள்ள விஞ்ஞானி வீரமுத்துவேலின் குடும்பத்தினரை நேற்று திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து நடிகர் ரோபோ சங்கர் நிருபர்களிடம் கூறுகையில், மிகவும் பின்தங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்த விஞ்ஞானி வீரமுத்துவேல், இந்த மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார். தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் போதை முழுமையாக ஒழிக்கப்படும். இதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதால் போதை என்ற வார்த்தை இல்லாத அளவிற்கு தமிழகம் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. என்னை பொறுத்தவரை ரியல் சூப்பர் ஸ்டார் வீரமுத்துவேல்தான் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com