நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் - மணிமண்டபத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் - மணிமண்டபத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
Published on

சென்னை,

நடிகர் சிவாஜி கணேசனின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் தமிழக முதல் அமைச்சர் சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, துரைமுருகன், கே.என்.நேரு, மதிவேந்தன், எ.வ.வேலு, சென்னை மேயர் பிரியா, தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கடந்த 2001ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சிவாஜி கணேசன் மறைந்தார். சிவாஜி கணேசனின் உடல் மறைந்தாலும் அவரது நடிப்பு தமிழ் சினிமா உள்ளவரை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பதும் அவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் தேசிய  விருது பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com