சென்னை மத்திய கைலாஷ் அருகே நடிகர் சிவகார்த்திகேயன் கார் விபத்து


சென்னை மத்திய  கைலாஷ் அருகே நடிகர் சிவகார்த்திகேயன் கார் விபத்து
x
தினத்தந்தி 20 Dec 2025 8:57 PM IST (Updated: 20 Dec 2025 11:11 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் சிவகார்த்தியேகன் சென்ற கார், மத்திய கைலாஷ் அருகே விபத்தில் சிக்கியுள்ளது.

சென்னை,

நடிகர் சிவகார்த்திக்கேயன், சென்னை கிண்டியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர், அவர் மத்திய கைலாஷ் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது வீட்டுக்கு சொகுசு காரில் சென்றுக்கொண்டிருந்தார். அவருடைய கார் மத்திய கைலாஷ் சிக்னல் அருகே சென்ற போது, முன்னாள் சென்ற கார் திடீரென்று திரும்பியதால் லேசாக உரசிவிட்டது.

கோபமடைந்த சிவகார்த்திகேயன் காரில் இருந்து இறங்கி அந்த காரை நோக்கி சென்றார். அப்போது அந்த காரில் பெண் ஒருவர் இருந்தார். அவர், முன்னாள் ராணுவ வீரரின் மனைவி என்று கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் சாலையில் இறங்கி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் விரைந்து வந்தார்.

அப்போது காரை ஓட்டி சென்ற பெண் தன் மீதான தவறை உணர்ந்து சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது. இதனால் சிவகார்த்திக்கேயன் பெருந்தன்மையோடு புகார் எதுவும் கொடுக்காமல் சென்றுவிட்டார். இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story