போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவ பரிசோதனை


போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 23 Jun 2025 9:23 PM IST (Updated: 24 Jun 2025 12:21 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் உள்ள கிளப் மற்றும் பார்ட்டிகளில் போதைப்பொருளை ஸ்ரீகாந்த் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

சென்னை,

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஸ்ரீகாந்த். இவர் முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நடிகர் ஸ்ரீகாந்திடம் தீவிர விசாரணை நடத்தினர்.

பின்னர் ஸ்ரீகாந்திற்கு சம்மன் கொடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தினர். மருத்துவ பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஏற்கனவே கானா நாட்டைச் சேர்ந்த நபர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுங்கம்பாக்கத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அவருக்கு தற்போது மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

முன்னதாக ஸ்ரீகாந்தின் ரத்த சேகரிக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. இதில் நடிகர் ஸ்ரீகாந்த் 'கொக்கைன்' போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்த போதைப்பொருளை அவர் பயன்படுத்தியது தெரியவந்தது. பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்த் வைத்து 'தீங்கரை' என்ற படத்தை எடுத்து வருகிறார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் பிரசாத் போதைப்பொருளை நடிகர் ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவருக்கு வழங்கி உள்ளார். சென்னையில் உள்ள கிளப் மற்றும் பார்ட்டிகளில் போதைப்பொருளை ஸ்ரீகாந்த் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த போதைப்பொருள் வழக்கில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? திரையுலகை சேர்ந்தவர்கள் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 'ரோஜாக்கூட்டம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீ காந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ்த்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story